நாட்டை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை முதலில் கொல்ல வேண்டும் என மாவோயிஸ்களுக்கு ஐடியா கொடுத்த பப்பு யாதவ் எம்.பி.யின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானவர் பப்பு யாதவ். பின்னர் இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஜன் ஆதிகார் என்ற  கட்சியைத் தொடங்கிய பப்பு யாதவ் அக்கட்சியின்  தலைவராக உள்ளார். இந்நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய  பப்பு யாதவ், மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படை வீரர்களை கொல்லக்கூடாது என வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக  நாட்டையே கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை கொல்ல வேண்டம் என ஆவேசமாக பேசினார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் ஊழல், பயங்கரவாதம் மற்றும் மாவோயிஸ்ட்கள் பிரச்சனை தீர்ந்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தாரே என  பேசிய பப்பு யாதவ் 
இப்போதும் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் எப்படி தொடர்கிறது என கேள்வி எழுப்பினார்