Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகளே உஷார்... செப்டம்பர் 1-ம் தேதிக்கு உலுக்கியெடுக்கப்போறாங்க ஜாக்கிரதை..!

போக்குவரத்து விதிகளை மீறினால் செப்டம்பர் 1ம் தேதி முதல் கடுமையான அபராதம் செலுத்தும் புதிய சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.  
 

motor vehicles amendment bill 2019 effective from september 1
Author
Tamil Nadu, First Published Aug 21, 2019, 5:04 PM IST

போக்குவரத்து விதிகளை மீறினால் செப்டம்பர் 1ம் தேதி முதல் கடுமையான அபராதம் செலுத்தும் புதிய சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.  motor vehicles amendment bill 2019 effective from september 1

நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க மோட்டார் வாகன திருத்தச் மசோதா 2019 சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட மசோதாவின் பல விதிகள், அடுத்த செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. புதிய சட்டம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கிறது. அதன் படி, மைனர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும்.

motor vehicles amendment bill 2019 effective from september 1

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இப்போது இந்த அபராதம் 100 ரூபாயாக இருக்கிறது. இது பத்து மடங்கு 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் தற்போது 1000 ரூபாய் அபராதம். ஆனால் புதிய சட்டத்தின்படி, 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தற்போது 500 ரூபாய் அபராதம். ஆனால் இது 10 மடங்கு உயர்ந்து புதிய சட்டத்தின் படி 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.motor vehicles amendment bill 2019 effective from september 1

ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்பட்டு பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தற்போது இது 500 ரூபாயாக உள்ளது. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.100 அபராதம். ஆனால் இது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி சென்றால் அபராதம் ரூ.1000 முதல் ரூ.2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம். தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் அபராதம். ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.1000 ஆக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios