உத்தர பிரதேசத்தில் 8 போலீஸாரை சுட்டுத்தள்ளிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுமாறு அவரது தாய் வலியுறுத்தியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த விகாஸ் துபேவை பிடிப்பதற்காக டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீஸார் அந்த இடத்திற்கு சென்றனர். 

விகாஸ் துபேவை பிடிக்க சென்றபோது, போலீஸாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது ரவுடிகள் சுட்டதில், டி.எஸ்.பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர். 

போலீஸை சுட்டுக்கொன்று விட்டு தப்பிய ரவுடி விகாஸ் துபேவை 25 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறது உத்தர பிரதேச காவல்துறை. 

இந்நிலையில், விகாஸ் துபேவின் தாய் சரளா தேவி, அவன்(மகன் விகாஸ்) போலீஸில் சரணடைய வேண்டும். சரணடையாமல் தலைமறைவாக இருந்தால், போலீஸ் அவர்களாக கண்டுபிடித்தால் என்கவுண்டர்கள் செய்துவிடுவார்கள். அவனை பிடித்தால் என்கவுண்டரில் கொன்றுவிடுங்கள். அவன் செய்தது மிகப்பெரிய குற்றம் என்று சரளா தேவி தெரிவித்துள்ளார். 

மகனாக இருந்தாலும் அவர் செய்தது குற்றம் என்பதால், அவரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுமாறு தாயே தெரிவித்திருக்கிறார்.