தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை, நடுரோட்டில் வைத்து தண்டனை அளித்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் இந்தூரில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த அந்த நபரை கைது செய்த போலீசார், அவரை அழைத்து சென்றனர். 

அப்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமியின் தாய், அந்த குற்றவாளியை பார்த்ததும் ஓடிச் சென்று அடிக்கத் தொடங்கினர். பாலியல் குற்றவாளியை, அவர் மாறி மாறி கன்னத்தில் அறைந்தார். இதனால் குற்றவாளி நிலைகுலைந்து போனார்.

பாலியல் குற்றவாளியை அந்த பெண் அடிப்பதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ போலீசார் முயலவில்லை. அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர், இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தனது மகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை நினைத்து அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. மன வேதனை தாங்காத அவர், குற்றவாளியைப் பார்த்ததும் கோபமடைந்து அந்த நபரை தாக்கியுள்ளார். 

அண்மைக் காலமாக இந்தூர் பகுதியில் அதிகளவில் பாலியல் குற்றச் சம்பவங்கள் நடுந்து வருவதாக போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக இதுவரை ஒரு பெண் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிலைய, நடுரோட்டில் வைத்து தைரியமாக தாக்கிய அந்த பெண்ணை பலர் பாராட்டி வருகின்றனர்.