G20 Summit: ஜி 20 மாநாடு விளம்பர பதாகைகளுடன் புதுவையில் 100 மாட்டு வண்டிகளில் நகர்வலம்
நடப்பாண்டுக்கான ஜி 20 மாநாடு இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெறவுள்ள நிலையில், மாநாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரியில் நூற்றுக்கும் அதிகமான மாட்டு வண்டிகளில் விளம்பரப் பலகைகள் கட்டப்பட்டு நகர்வலம் நடத்தப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா சுழற்சி முறையில் தலைமை பொறுப்பேற்றுள்ளது. நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாநாடு நடைபெறவுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் உள்ள உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
குளித்தலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வீரர் பலி
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் முன்னோட்டமாக ஜி 20 லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஜி 20 குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காணும் பொங்கல் தினத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் மாட்டுவண்டி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொங்கல் விடுமுறையை கொண்டாட தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
அதன்படி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு கரும்புகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு ஜி 20 என்ற விழிப்புணர்வு பலகையுடன் நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, சுப்பையா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுவண்டிகளின் நகர்வலம் நடைபெற்றது.
இதில் ஆனந்தமாக பயணம் செய்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆரவாரமாக கூச்சல் இட்டபடி நகரத்தை வலம் வந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.