பெண் சாமியார் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! ஒரு கோடி மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்..

குஜராத்தில் பெண் சாமியார் வீட்டிலிருந்து 24 தங்கக்கட்டிகள், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

செல்லாத நோட்டு திட்டம் அமலில் இருந்த டிசம்பரில், குஜராத்தில் நடந்த, ஒரு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி யில் பெண் சாமியார் ஸ்ரீகிரி பங்கேற்றார்.

அப்போது, பாடகர் மீது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளை, ஸ்ரீகிரி வாரி இறைத்தார்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், புதிய நோட்டுகள், ஸ்ரீகிரிக்கு எவ்வாறு கிடைத்தன என்ற சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் 5 கோடி ரூபாய்க்கு நகைகள் வாங்கிவிட்டுப் பணம் தரவில்லை என்று, பனஸ்காந்தா பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்சாமியாரின் வீட்டை சோதனையிட்ட போலீசார், 24 தங்கக்கட்டிகள், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் சாமியாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.