சென்னையில் உள்ள எபிஐ வங்கி ஏடிஎம்களில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

சில்லறை பிரச்னையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மெல்ல சீரடைந்து வருகிறது. மின்னணு பணப் பரிவர்த்தனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஸ்வைப் இயந்திரங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

ஏடிஎம்களில் புதிய 500 ரூபாயை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பான பிரச்சனை டிசம்பரில் சீரடையும்.

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வங்கிகளுக்கு முதலீட்டை அதிகரிப்பதற்காக மத்தய அரசு, ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்தது ஏற்கன முடியாது. கருப்பு நோட்டை ஒழிப்பதற்காக, புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டு இருப்பது வரவேற்கப்படுகிறது.

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்து, வங்கி கணக்கை தொடங்கலாம். கடனுக்கான வட்டி விகித்ததை குறைப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.