ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து தினமும் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க நான் பதிலளிக்கிறேன் என அருண் ஜேட்லி கூறினார்.
கடந்த மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு அனைத்து எதிர்க்கட்சியினரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும், நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் தினமும் ஒவ்வொரு காரணத்துக்காக முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சனை குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர். இதற்கு நான், சமரசமாக போக மாட்டேன். அவர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
