Asianet News TamilAsianet News Tamil

"மோடியின் அடுத்த அஸ்திரம் ..." ஒரு ஆண்டுக்கு யாரும் எந்த சொத்தையும் விற்க முடியாது?

modis next-action
Author
First Published Nov 22, 2016, 3:44 PM IST


கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் எதிராக பிரதமர் மோடி தற்போது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி வருகிறார். 

இந்த அதிரடி நடவடிக்கைகள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கருப்பு பணத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள், பினாமி சொத்துக்கள்  அதாவது, "பிளாக் ப்ராபர்ட்டீஸ் " மீது அடுத்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்த திட்டமிட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கான ஒரு தேர்ந்த வல்லுநர்கள் குழு உதவியுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

 

modis next-action

நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுக்களையும் ஒழிக்கும் நோக்கில் கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர்மோடி அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க கடும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

50 நாட்களுக்கு மக்கள் இந்த கட்பட்டுபாடுகளை பொருத்துக்கொள்ள வேண்டும், அதன்பின், கருப்பு பணம் நிச்சயம் ஒழிக்கப்பட்டு விடும் என பிரதமர் மோடி மக்களிடம் உறுதியளித்து செயல்பட்டு வருகிறார். 

ஆனால், பண முதலைகள், பெரும்  கோடீஸ்வரர்கள், தங்களின் கருப்பு பணத்தை ரொக்கமாக மட்டும் வைத்திருப்பதில்லை. 

மாறாக, தங்கமாக,  ரியல் எஸ்டேட், வயல், தோப்பு, வெளிநாடுகளில் அசையா சொத்துக்கள் என பல வகைகளில் முதலீடு செய்து வைத்துள்ளனர்.

 modis next-action

மேலும், பினாமி பெயர்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளனர். இந்த நடைமுறைகள் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. கருப்பு பணத்தின் தோற்றுவாய் ரியல் எஸ்டேட் என்றாலும் மிகையில்லை. 

இதை கண்டுபிடிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது அடுத்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் செயல்படுத்துவார் எனத் தெரிகிறது. 

அதன்காரணமாகவே, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்படுகிறது. 

வரி முறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தம் என்று சொல்லப்படும்  ஜி.எஸ்.டி. வரி போல,  கருப்பு பணத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை மீட்க மோடியின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக இது இருக்கும் எனக்  கூறப்படுகிறது. 

சரி அப்படி என்ன தான் நடவடிக்கை எடுக்கப்போகிறார்.....

அதாவது, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்தும் அடுத்த ஒரு ஆண்டுக்கு  அசையா சொத்துக்கள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்படும்.

அதாவது, அசையா சொத்துக்களை யாரும் வாங்கவோ, அல்லது விற்கவோ அரசு அங்கீகாரம் அளிக்காது. 

இதனால் நாட்டு மக்கள் யாரும் தங்கள் கையில் உள்ள பணத்தைக் கொண்டு எந்தவிதமான சொத்தையும் விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. 

அந்த பணம் வங்கியில் மட்டுமே முடங்கி இருக்கும். அல்லது, அரசு கடன் பத்திரங்களாக, பங்குச்சந்தையில், பங்குகளாக, தங்கமாக மட்டுமே இருக்கும். 

ஏற்கனவே அசையா சொத்து வைத்துள்ளவர்கள், அது நிலம், வீடு, தோப்பு, வயல்,  பெரிய வணிக வளாகங்கள் என எந்த சொத்து வைத்து இருந்தாலும், அனைவரும், மத்திய அரசின் " இ- பிராபர்ட்டி பாஸ் புக்கில் " பதிவு செய்ய வேண்டும். 

இந்த " இ-பிராபர்ட்டி பாஸ் புக் " என்பது,  நாட்டில் உள்ள அனைத்து சொத்து விவரங்களும் யார் பெயரில் இருக்கிறது என்பதை அரசுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படுகிறது.  

இவ்வாறு தெரிவிக்கப்படும் போது, சொத்துக்களின் உரிமையாளர்கள் பெயர், முகவரி, புகைப்படம், மற்றும் ஆதார் எண்,  பான் கார்டு எண் என அனைத்தும் இணைக்கப்பட்டு விடும். 

அதன்பின், "இ-பிராபர்ட்டி பாஸ் புக்கில்" பதிவு செய்தபின், அந்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், யாரும் இந்த சொத்தை வாங்க முடியும். 

சொத்துக்களின் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து, அடையாள அட்டைகளை காண்பித்து பதிவு செய்து, அந்த விவரங்கள் " இ-பிராபர்ட்டி பாஸ்புக்கில் " இணைக்க வேண்டும்.

அவ்வாறு,  இணைக்கப்பட்ட உடன் அந்த சொத்து முறைப்படி சட்டஅங்கீகாரம் பெறும். அதுவரை அந்த சொத்துகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. 

இதன் மூலம் நாட்டின் எந்த மூலையிலும் ஒரு சொத்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கைமாறினாலும் அது அரசுக்கு தெரிந்துவிடும். 

சொத்துக்கான முத்திரைத்தாள் சரியாக கட்டப்படும். யாருடைய பெயரில் சொத்துக்கள் இருக்கின்றன என்ற விவரங்கள் அரசுக்கு தெரியவரும்.

வருவாய்க்கும், சொத்துமதிப்புக்கும் தொடர்பில்லாத நபர்களாக இருந்தால், அதாவது, பினாமி சொத்து தாரர்களாக இருந்தால், இந்த திட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு,வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். 

மேலும், அவசரத் தேவைகளுக்காக, மருத்துவச் செலவுக்காக, விசேஷங்களுக்காக ஏதாவது சொத்துக்களை விற்க முயல்பவர்களுக்காக, இ-பிராபர்ட்டி பாஸ் புக் சேவை மூலம், அவசரதிட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். 

அந்த திட்டத்தில் சொத்துக்களை வாங்குவோர்கள், விற்போர், நிறுவனங்கள், தங்களின் உண்மையான விவரங்களை பதிவு செய்து, பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இது தீவிரமாக ஆய்வுக்கு பின்பே சொத்துக்கள் விற்பதும் வாங்குவதும் அனுமதிக்கப்படும். 

நாட்டில் அசையா சொத்து வைத்து இருப்பவர்கள் அனைவரும் இ-பிராபர்ட்டி பாஸ்புக்கில் தங்களின் சொத்து விவரங்களை பதிவு செய்து கொள்ள 2018 மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம்  வழங்கப்படும். 

இந்த ஓர் ஆண்டு அவகாசத்துக்கள்  சொத்துக்களை வைத்துள்ளவர்கள் பதிவு செய்ய தவறினால், அதன்பின், அந்த சொத்து அவர்களுடையது அல்ல. 

இ-பிராபர்ட்டி பாஸ்புக்கில் பதிவு செய்யப்படாத சொத்துக்கள் அனைத்தையும் அரசு  2018-ஏப்ரல் முதல் தேதி முதல் மத்தியஅரசு கையகப்படுத்தும். 

இந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள், பினாமி மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் அரசின் பார்வைக்கு கொண்டு வரப்படும். 

அவ்வாறு வருமானவரித்துறையின் விசாரணையை எதிர்கொள்ளப்பயந்து சொத்துக்களை பதிவு செய்யாதவர்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios