modi wife met with an accident today

பிரதமர் மனைவி சென்ற கார் விபத்து..! டிரைவர் "ஸ்பாட் அவுட்"..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் என்ற இடத்தில், மோடியின் மனைவி ஜஷோதா பென் மற்றும் இரண்டு பெண்கள்,கமாண்டோ ஒருவர் பயணம் செய்து உள்ளனர்.

அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் மீது இவர் சென்ற கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் பசந்த் பலியானார்

இந்த விபத்து இன்று காலை 10 மணி அளவில் நடைப்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் மனைவி சிறு காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

உடன் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு கமேண்டோவை, அருகில் இருந்த சித்தோர்கர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மேலும் கமேண்டோ பலத்த காயம் அடைந்து உள்ளதால், அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ட்ரக் ஓட்டுனர் திடீரென போட்ட ப்ரேக்கால், இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது

மோடியின் மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளதால், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

பிரதமர் மனைவி சென்ற கார் விபதுகுள்ளான சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.