திருப்பதிக்கு பிரதமர் மோடி இன்று வருகை

ஆந்திரமாநிலம், திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வராதிருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழத்தில் 104-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நாளை முதல் 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக வருகை தரும் போது, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இது குறித்து திருப்பதி  திருமலை தேவஸ்தான தலைவர் சதாலவாடாகிருஷணமூர்த்தி கூறுகையில், “ திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி 2-ந்தேதி வருகை தருகிறார். இங்கு ஒரு மணி நேரம் வரை இருந்து சாமி தரிசனம் செய்து விட்டு டெல்லி புறப்படுவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின் திருப்பதிக்கு பிரதமர் மோடி வருகை தருவது இது 2-வது முறையாகும் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி இங்கு வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.