பிரதமர் மோடி கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, மக்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், சுதந்திரத்தின்று பேசும் உரை சிறிது நீளமாக இருக்கிறது அதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதற்கு பிரதமர் மோடியும் தனது பேச்சின் நீளத்தை குறைப்பதாக உறுதியளித்து இருந்தார்.

அதன்படி, பிரதமர் மோடி நேற்று தனது சுதந்திர தின உரையை 57 நிமிடங்களில் முடித்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைந்த நேரத்தை மோடி உரையாற்றியுள்ளார்.

இதற்கு முன் கடந்த 2015ம் ஆண்டு 86 நிமிடங்களும், 2014ம் ஆண்டு 65 நிமிடங்களும் பேசி இருந்தார். கடந்த ஆண்டு 96 நிமிடங்கள் பேசி, சுந்திரதினத்தன்று நீண்டநேரம் பேசிய  பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

இதற்கு முன் கடந்த 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது, செங்கோட்டையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 72 நிமிடங்கள் பேசியதே அதிகபட்சமாக இருந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 சுதந்திர தின உரையையும், 50 நிமிடங்களுக்குள்ளாகவே முடித்துக் கொண்டார். 2005, 2006ம் ஆண்டு சுதந்திரதின பேச்சை 50 நிமிடங்களும், மற்ற 8 சுதந்திரதினத்திலும் 32 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே மன்மோகன் சிங் பேசி இருந்தார். 2002ம் ஆண்டு 25 நிமிடங்களும், 2003ம் ஆண்டு 30 நிமிடங்களும் மன்மோகன் சிங் பேசி இருந்தார்.