Modi speech at the Buddhist Conference to settle the peace of mind

உலக அளவில் நாளுக்கு நாள் அதிரித்து வரும் வெறுப்பு, வன்முறைக்கு புத்த மதம் போதித்த அமைதியே தீர்வாகும். வெறுப்பும், வன்முறையும் வேர்பிடித்த மனநிலை உலகத்தின் நிலையான அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அமைதிக்கு சவால் இல்லை என்று உலக புத்த மதமாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசுமுறைப்பயணமாக இலங்கை சென்றார். அங்கு ‘விசாக்நாள்’ எனச் சொல்லப்படும் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்திலும், இந்தியா சார்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.

கொழும்பு நகரில் நேற்று நடந்த விசாக் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைபபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே, அதிபர் சிறிசேனா ஆகியோர் பிரதமர் மோடியை அழைத்து வந்தனர். அதன்பின் பிரதமர் மோடி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின், புத்த துறவிகள் பலர் பிரார்த்தனையும், பாரம்பரிய முறையில் வழிபாடும் நடத்தினர். அதில் பிரதமர் மோடி மிகுந்த மரியாதையுடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

இதில் புத்த துறவிகள், கல்வியாளர்கள், புத்த தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின், தொடங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

இந்த ஆசியப் பிராந்தியத்தில் வெறுப்பின் சித்தாந்தங்களை ைவத்துக்கொண்டும், அதற்கு ஆதரவாக இருப்பவர்களும், பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. இதனால், அவர்கள் மக்களின் உயிர்பலிக்கும், அழிவுக்குமே காரணமாக மாறுகிறார்கள்.

நமது பிராந்தியத்தில் தீவிரவாதம்தான் மிகப்பெரிய கவலையாக மாறி இருக்கிறது. தீவிரமாத நமது உணர்ச்சிகளை அழித்து வருகிறது. அண்டை நாடு ஒன்று,(பாகிஸ்தான்) தீவிரவாதிகளுக்கு உதவிகளும் பயிற்சிகளும் அளித்து இந்தியப் பகுதியில் தாக்குதல் நடத்த காரணமாக இருந்து வருகிறது. 

 உலக அமைதி நிலைத்திருக்க மிகப்பெரிய சவாலாக இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள், கருத்து ேவறுபாடுகள் தான் இருக்க வேண்டியது அவசியமில்லை. வன்முறை வெறுப்பின் வேர்கள் படிந்த எண்ணங்கள்தான் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது.

இந்த உலகில் அதிகரித்து வரும் வன்முறைக்கு தீர்வு, பதிலாக புத்த மதம் போதித்த அமைதிதான் தீர்வு. இதை இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றார்போல், புத்தர் போதித்து உள்ளார்.

புத்தரின் போதனைகளையும், புத்தரையும் இந்த உலகுக்கு நம் ஆசிய கண்டம் அளித்து ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. நம்முடைய நிர்வாகம், கலாச்சாரம், தத்துவம், சித்தாந்தம் ஆகியவற்றில் புத்த மதம் நிறைந்துள்ளது.

சமூகநீதி, உலக அமைதி ஆகியவற்றை ஆழமாக புத்தர் மக்களுக்கு போதித்தார். இவை இரண்டும் ஆழமாக ஒன்றோடு ஒன்று சார்ந்தவை, தொடர்புள்ளவை.

இலங்ைகயின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து தனது ஆதரவையும், உதவியையும் அளிக்கும். இரு நாடுகளும் உறவை வளர்த்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாகும். இந்தியாவை நண்பனாக, கூட்டாளியாக பார்க்கலாம். இருநாடுகளும் புத்தரின் சித்தாந்தங்களையும், அமைதியையும், போதிக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.