பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் வானொலி மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாடி வருகிறார்.

அதன்படி, பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டப் பின்னர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த அவர், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க சிலர் ஏழைகளை பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், 70 ஆண்டுகளாக பிடித்துள்ள நோயை குணப்படுத்தும் சிகிச்சை எளிமையானதல்ல என்றும், ரூபாய் நோட்டு பிரச்னையிலிருந்து முழுமையாக மீள 50 நாட்களாகும் என்றும் மோடி தெரிவித்தார்.