Asianet News TamilAsianet News Tamil

வரிசையில் வந்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய மோடியின் தாயார்...!!!

modi mother-in-bank
Author
First Published Nov 15, 2016, 7:24 PM IST


கடந்த 8ம் தேதி செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளானது.

இதனைதொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வைத்திற்குக்கும் பழைய பணத்தை வங்கிகளில் கொடுத்து புதிய 5௦௦, மற்றும் 2௦௦௦ ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

ஆனால், வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் கிடைக்காததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

modi mother-in-bank

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி தான் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள வங்கிக்கு வந்தார்.

தொடர்ந்து சக்கர நாற்காலியில் வரிசையில் வந்த அவர் 4500 ரூபாய் பழைய நோட்டுக்களை வங்கிகியல் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று சென்றார்.

பிரதமரின் தாயாரே வந்து வங்கியில் பணம் மாற்றி சென்றதை பொதுமக்கள் சற்று ஆச்சரியத்துடனே பார்த்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios