சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக, மக்களவையில் எழுச்சிமிக்க உரையை  நிகழ்த்தியுள்ளார் மோடி.

அப்போது, சுதந்திர போராட்டத்திற்காக உருவான “வெள்ளையனே வெளியேறுஇயக்கம்” ஒட்டு மொத்த இந்தியாவையும் வலிமை கொள்ள செய்தது என்றும், 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கமானது, இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என்பதை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தில், மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற கூற்றை மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.மக்களும்   பின்பற்றி வெற்றி கண்டனர்.

அதே போன்று, தற்போது நம் நாட்டில் ஊழல், வறுமை, ஊட்டச்சத்து குறைப்பாடு, முழுமையான கல்வி   கற்க இயலாமை என அனைத்தும், மாபெரும் சவாலாக உள்ளது. இதனை வென்றெடுக்கும் பொருட்டு, 1942  முதல்1947  ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்  நடைப்பெற்ற  அதே எழுச்சியை, மீண்டும் உருவாக்க சபதம் ஏற்போம் என பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார்.