நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவில் தரை இறங்க இருக்கிறது. வரலாற்றுச் சாதனையாக கருதப்படும் இந்த நிகழ்வை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதிக்கும் காட்சியை பிரதமர் மோடி நேரில் பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பார்வையிட இருக்கிறார். இதற்காக அவர் இன்று ஸ்ரீஹரி கோட்டா வரவுள்ளார்.

பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்த நிகழ்வை காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து 60 மாணவ மாணவிகள் தேர்தெடுக்க பட்டுள்ளனர். இவர்களும் இன்று இஸ்ரோவில் இருந்து இந்த வரலாற்று நிகழ்வை கண்டுகளிக்க உள்ளனர்.

இதனிடையே இந்த வெற்றிகரமான சாதனையை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், " வரலாற்றுச் சாதனைக்காக இஸ்ரோ வருகிறேன். இந்த நிகழ்வை என்னுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் மாணவர்களுக்கும் காண உள்ளனர். 

கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பயனளிக்க உள்ளது சந்திராயன் 2. இந்த நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் காண வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.