மோடி 3.0 முதல் 100 நாளில் சாதித்தது என்ன? மகளிர் நலன் முதல் மருத்துவம் வரை பல சாதனைகள்!
மூன்றாவது முறையாக பிரதமரான மோடி என்ன செய்தார் என்ற கேள்விக்கு நீண்ட பதிலாக மோடி அரசு முதல் 100 நாட்களில் செய்த சாதனைகளின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
100 நாட்களில் ரூ. 3 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்
➢ சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமானப் பாதை வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
➢ மகாராஷ்டிராவில் உள்ள வாத்வான் மெகா துறைமுகம் ரூ. 76,200 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
➢ பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்-IV (PMGSY-IV) மூலம் 62,500 கிமீ சாலைகள் மற்றும் பாலங்கள் கட்ட அல்லது மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 25,000 செலவில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை போடப்படுகிறது. இதற்கு ரூ.49,000 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
➢ இந்தியாவின் சாலைப் போக்குரவத்தை வலுப்படுத்த ரூ.50,600 கோடி முதலீடு செய்யவும், 936 கிமீ தூரம் கொண்ட 8 தேசிய அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு
➢ லடாக்கை இமாச்சல பிரதேசத்துடன் இணைக்கும் ஷிங்குன்-லா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
➢ வேகமான மற்றும் வசதியான ரயில் பயணத்திற்காக 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல்.
➢ வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த ஒப்புதல்.
➢ மேற்கு வங்கத்தில் பாக்டோக்ரா மற்றும் பீகாரில் பிஹாட்டா ஆகிய இடங்களில் புதிய சிவில் என்க்ளேவ்களைக் கட்டுதல்.
➢ அகட்டி மற்றும் மினிகோயில் விமான ஓடுபாதைகள் அமைக்க ஒப்புதல்.
➢ பெங்களூரு மெட்ரோ, புனே மெட்ரோ மற்றும் தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.
விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள்
➢ பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 17வது தவணை வெளியீடு. 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதியுதவி விநியோகம். இதுவரை மொத்தம் 12.33 கோடி விவசாயிகள் ரூ.3 லட்சம் கோடி நிதியைப் பெற்றுள்ளனர்.
➢ 2024-25 காரிஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அதிகரிப்பு. இது 12 கோடி விவசாயிகளை ஆதரிப்பதன் மூலம், அவர்களுக்கு சுமார் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான லாபம் கிடைக்கும்.
➢ ஆந்திரப் பிரதேசத்தில் போலவரம் பாசனத் திட்டத்துக்கு ரூ. 12,100 கோடி ஒதுக்க ஒப்புதல். ரூ. 14,200 கோடி மதிப்பிலான ஏழு ஆண்டு முக்கிய திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
➢ விவசாயத் துறையில் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க டிஜிட்டல் வேளாண்மை மிஷன்.
➢ புதிய தேசிய ஒத்துழைப்புக் கொள்கையின் வரைவு நிறைவடைந்துள்ளது.
➢ தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL) மற்றும் உத்தரகாண்ட் ஆர்கானிக் கமாடிட்டி வாரியம் இடையே ஒப்பந்தம்.
கிசான் மித்ரா மோடி
➢ வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி வரி நீக்கம். வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை 40% லிருந்து 20% ஆக குறைப்பு.
➢ கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எத்தனால் உற்பத்தி அலகுகளை தீவன வசதிகளாக மாற்ற நடிவடிக்கை. இதனால் மக்காச்சோளத்தில் எத்தனால் உற்பத்தியும் சாத்தியமாகும்.
➢ சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கச்சா பாமாயில் மீதான வரி 12.5% லிருந்து 32.5% ஆக உயர்வு.
➢ விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் விரிவாக்கம்.
➢ ஜம்மு காஷ்மீரில் ரூ. 3,300 கோடி மதிப்பிலான விவசாயத் திட்டங்கள்.
➢ கிருஷி சஹாயா குழுக்களின் 30,000 பெண் விவசாயிகளை கௌரவித்தல்.
➢ "மிஷன் மௌசம்" திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி ஒப்புதல்.
➢ அக்ரிஸ்யூர் (AgriSure) என்ற புதிய நிதி தொடக்கம்.
நடுத்தர வகுப்பினருக்கான வரி நிவாரணம்
➢ ரூ. 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிச் சலுகை.
➢ மாத ஊதியம் பெறுபவர்கள் ரூ. 17,500 சேமிக்க முடியும்.
➢ நிலையான வரி விலக்கு ரூ. 75,000 ஆக அதிகரித்துள்ளது.
➢ குடும்ப ஓய்வூதியத்தில் விலக்கு ரூ.25,000 வரை.
➢ வரி விதிகளை எளிமைப்படுத்த விரிவான ஆய்வு.
➢ 25 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரி ஊதியத்தில் 50% ஓய்வூதியம்.
➢ "ஒரே நாடு, ஒரே ஓய்வூதியம்" மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துதல்.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள்
➢ நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
➢ பிரதமர் சூர்யா கர் முக்த் வித்யுத் யோஜனா மூலம் 2.5 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
➢ சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்து போக்குவரத்துக்கு ஈ-பஸ் சேவையைத் தொடங்க ரூ. 3,400 கோடி நிதி உதவி.
தொடக்கங்களுக்கான ஆதரவு
➢ 31% ஏஞ்சல் வரியை நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40% லிருந்து 35% ஆக குறைப்பு.
➢ விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ. 1,000 கோடி தொழில்முறை உதவித்தொகை. GENESIS திட்டத்திற்கு ஒப்புதல்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வசதிகள்
➢ 12 தொழில்துறை மையங்களின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
➢ முத்ரா கடன் வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரித்துள்ளது.
➢ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பிணையமில்லாத கடன் திட்டம்.
➢ பாரம்பரிய கைவினைஞர்களுக்கான இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்களை உருவாக்குதல்.
இளைஞர் வலுவூட்டல்
➢ 41 மில்லியன் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு.
➢ சிறந்த நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப்.
➢ 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.
➢ 15,000 புதிய பணியாளர்கள்.
தொழிலாளர்களுக்கு அதிகாரமளித்தல்
➢ ஊழியர்களுக்கு ரூ. 15,000 மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.
➢ இ-ஷ்ரம் போர்டல் மூலம் தொழில்களை மேம்படுத்துதல்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல்
➢ 48 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக ரூ. 2,500 கோடி சமாஜ் முதலீட்டு நிதி வெளியீடு.
➢ 25.8 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 5,000 கோடி வங்கிக் கடன்.
பழங்குடியின கிராமங்களின் வளர்ச்சி
➢ பிரதம மந்திரியின் பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 63,000 பழங்குடியின கிராமங்களை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன மூலம் 5 கோடி பழங்குடியினரின் சமூக-பொருளாதார நிலை மேம்பாட்டுள்ளது.
➢ நமஸ்தே திட்டத்தின் விரிவாக்கம்: இத்திட்டம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கழிவுகளை எடுப்பவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக கவரேஜ் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
➢ மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைகள்: 3 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை (யுடிஐடி) வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை பெற்றுள்ளவர்களில் 1.17 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
OBC, தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்
➢ பிரதமரின் சூரஜ் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்குதல்.
➢ ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1.23 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 40 புதிய பள்ளிகளைத் தவிர, 110 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
➢ வக்ஃபு (திருத்தம்) மசோதா, 2024: ஆன்லைன் பதிவு மற்றும் வக்ஃபு சொத்துக்களை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கம்.
சுகாதார சேவைகள்
➢ ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு. 4.5 கோடி குடும்பங்களில் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்.
➢ 75,000 புதிய மருத்துவ இடங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்.
➢ U-WIN போர்டல் துவக்கம்: வழக்கமான தடுப்பூசிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
➢ தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மருத்துவர்களின் விவரங்களை நிர்வகிக்கும் தேசிய மருத்துவப் பதிவேட்டை உருவாக்குகிறது.
மருத்துவ சேவைகள்
➢ பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
➢ புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்களின் நிதிச்சுமையை குறைக்க 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி சலுகையை அமல்படுத்தப்பட்டுள்ளது.
➢ PM E-DRIVE திட்டத்தின் கீழ் மின்சார ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 10,900 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
➢ ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) இப்போது "ஸ்கேன் & ஷேர்" அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி வெளிநோயாளர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றம்
➢ சந்திரயான் மற்றும் மங்கள்யானின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில், முதல் தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்பட்டது.
➢ விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ. 1000 கோடியில் தொழிற்கல்வி நிதியத் திட்டம் நிறுவப்பட்டது.
➢ ஆகஸ்ட் 16 அன்று SSLV-D3 ராக்கெட் மூலம் EOS-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
➢ SSLV ராக்கெட் மூலம் மினி, மைக்ரோ அல்லது நானோ செயற்கைக்கோள்களை 500 கிமீ சுற்றுப்பாதையில் செலுத்த முடியும்.
➢ ரூ. 50,000 கோடி தேசிய ஆராய்ச்சி நிதி மற்றும் ரூ. 10,500 கோடியில் 'விக்யான் தாரா' திட்டம் உருவாக்கப்பட்டது.
➢ செமிகண்டக்டர்கள்: குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 6 மில்லியன் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செமி கண்டக்டர் ஆலைகளை நிறுவியதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது.
➢ நாடு தழுவிய பேரிடர் மேலாண்மைக்காக தேசிய தரவுத்தளம் புவன் பஞ்சாயத்து போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்
➢ ஜூலை 1, 2024 அன்று, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக 3 புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிகா சுரக்ஷா சன்ஹிதா (BNSS), மற்றும் பாரதிய சபாய ஆதினியம் (BSA).
➢ அழிந்து வரும் உயிரினங்கள், நிதிக் குற்றங்கள் மற்றும் அறிவியல் சான்றுகள் தொடர்பான சட்டங்களுடன் சட்ட அமைப்பை வலுப்படுத்துதல்.
➢ அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயருக்கு ஸ்ரீ விஜயபுரா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
➢ திறம்வாய்ந்த நீதித்துறை அமைப்பிற்காக 'தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (NFIES)' அறிமுகம்.
➢ பொதுத் தேர்வுகள் வினாத்தாள் கசிவு பிரச்சனையைத் தீர்க்க, பொதுத்தேர்வு மோடிகளைத் தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆளுகை, சட்ட அமைப்பு
➢ CPGRAMS திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
➢ பூர்வோதயா திட்டத்தில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் விரிவான வளர்ச்சித் திட்டம்.
➢ நகர்ப்புற ஓடை மேலாண்மை மற்றும் பனிப்பாறை, ஏரி புயல் நீர் அபாயம் தணிப்பு திட்டங்களுக்கு ரூ. 6,350 கோடி ஒதுக்கீடு.
➢ லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் (ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தோங்) உருவாக்கப்பட்டன. இதனால் அங்கு மொத்தம் 7 மாவட்டங்கள் (லே மற்றும் கார்கில் உட்பட) உள்ளன.
➢ அவசரநிலை பிரகடனம் செயப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை 'சம்விதன் ஹத்ய திவாஸ்' ஆகக் கடைப்பிடிப்பதாக அறிவிப்பு.
ஆற்றல் பாதுகாப்பு
➢ வடகிழக்கு இந்தியாவில் நீர் மின் திட்டங்களுக்கு ஒப்புதல். வி.ஜி.எஃப் (VGF) திட்டத்தின் கீழ் ரூ. 12,400 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
➢ கடலோர காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ரூ. 7,450 கோடி ஒப்புதல்.
➢ தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்: எலக்ட்ரோலைசர் உற்பத்தி திறனை 1.5 ஜிகாவாட்டாக அதிகரிக்க 2வது தவணை நிதி வெளியீடு.
➢ பொதுத்துறை பிரிவுகளுக்கான சுற்றுச்சூழல் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக 'பசுமை கடன் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
➢ இந்தியாவில் 3ஆம் கட்ட மின்சார வாகன மானியத் திட்டம் (FAME) திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுக் கொள்கை
➢ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஃபிஜியின் உயரிய சிவிலியன் விருதினால் கௌரவிக்கப்பட்டார்.
➢ ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தின்போது பிரதமர் மோடியின் இரு நாடுகளுக்கும் பயண மேற்கொண்டார். G-7 உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
➢ மோடி முதல் முறையாக சிங்கப்பூர் மற்றும் புருனே சென்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கும், 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்துக்கும் இந்தியப் பிரதமர் பயணித்துள்ளார்.
➢ குளோபல் சவுத் மாநாட்டு நிகழ்ச்சியில் 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
➢ முதன்முறையாக யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் கூட்டத்தை இந்தியா நடத்தியது.
பேரிடர் மேலாண்மை
➢ பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா 2024 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
➢ பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 12,554 கோடி ஒதுக்கீடு. பேரிடர் நிவாரண நிதிகளின் (NDMF, SDRF) கீழ் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
➢ அவசரகால மீட்பு உதவு அமைப்பு (ERSS 2.0) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
➢ ஆந்திராவில் வெள்ள பாதிப்பு குறித்து அறிய சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு
➢ NLFT மற்றும் ATTF உடன் 35 வருட ஆயுத மோதலுக்குப் பிறகு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 328 ஆயுதமேந்திய செயற்பாட்டாளர்கள் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
➢ 5,000 சைபர் கமாண்டோக்களுக்கு 5 ஆண்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
➢ சைபர் குற்றங்களைப் புகாரளிக்க சைபர் தோஸ்த் (CyberDost) மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றத்திற்கான 'சமன்வே' தளமும் திறக்கப்பட்டுள்ளது.