இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. பதினெட்டு வயது பூர்த்தி இடைந்த ஆணோ அல்லது பெண்ணோ ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆர்டிஓ அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று ஓட்டநர் உரிமம் பெறும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. ஆனால் தற்போது கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளன.

இநத வகை ஸ்கூட்டர்கள் சைக்கிளைப் போன்று இலகுவானது. சிறியவர்கள் கூட இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம் என்பதால் 16 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து 16 முதல் 18 வயது உள்ளவர்கள் கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், பைக் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்கலாம் என, நாடாளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.