வரும் மே 1 முதல் மத்திய அமைச்சர்களின் காரில் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை விதிக்க  மத்திய  அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதாவது முன்பெல்லாம் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சிவப்பு சுழல் விளக்கை  பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு சிவப்பு சுழல் விளக்கை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது,யாரெல்லாம் பயன்படுத்தலாம்   என வரைமுறை வகுத்துள்ளது .

பயன்படுத்த கூடாதவர்கள் 

மத்திய அமைச்சர் , மத்திய இணை அமைச்சர் , எம்பிக்கள்  உள்ளிட்டவர்கள் வரும் மே 1 ஆம் தேதி முதல் சிவப்பு சுழல்  விளக்கை  பயன்படுத்த கூடாது என  மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது .

யாரெல்லாம் பயன்படுத்த தகுதியுடையவர்கள் ?

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அளவில் ஆளுநர், முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் மட்டும் தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய  அரசின் இந்த அதிரடி முடிவால், அமைச்சர்கள்  பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் விஐபி என்ற அந்தஸ்து பறிபோகிறது என்ற எண்ணமும் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மத்தியில் எழுந்துள்ளது.