டிரைவிங்கின் போது போனில் பேசுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் சில விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசும் போது கூறினார். 

டிரைவிங்கின் போது போனில் பேசுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் சில விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசும் போது கூறினார்.இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவது விரைவில் சட்டபூர்வமானது தான் என்று அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருக்கிறார்.எனினும் டிரைவிங்கின் போது போனில் பேசுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் சில விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசும் போது கூறினார். 

மக்களவையில் இதுகுறித்து பேசி இருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மொபைலை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டிவைஸுடன் (hands-free device) கனெக்ட் செய்திருந்தால் மட்டுமே டிரைவிங்கின் போது வாகனத்தை இயக்குபவர் மொபைலில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் என்றார். இது தவிர மொபைல் போனை கார் அல்லது பிற வாகனத்தில் வைத்து கொண்டு பேசாமல் பாக்கெட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம் என்றார்.

வாகனத்தை ஓட்டுபவர் மேற்காணும் நிபந்தனைகளை கடைபிடித்து மொபைலில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது மற்றும் போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படாது. அப்படி ஒருவேளை அபராதம் விதிக்கப்பட்டால் ஒருவர் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றும் மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஓட்டுநர்கள் சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் அதே நேரத்தில், சாலை விபத்துகளைக் குறைக்கும் அரசின் இலக்குடன் ஒத்திசைவதாக பார்க்கப்படுகிறது.