Asianet News TamilAsianet News Tamil

ராணுவம், போலீசாருக்கு ‘ஸ்மார்ட் சீருடை’

military unuiform
Author
First Published Dec 25, 2016, 10:33 PM IST


ராணுவம், போலீசாருக்கு ‘ஸ்மார்ட் சீருடை’

ஆள்பாதி; ஆடைபாதி என்பார்கள். ஆனால், நம் நாட்டில் உள்ள போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல மத்திய படைகள் சுதந்திரம் பெற்றபோது இருந்தமாடலில் சீருடைகளை அணிந்து வருகின்றனர்.

இதை மாற்றி காலத்துக்கு ஏற்றார்போல், நவீனமாகவும், அனைத்து காலநிலைக்கு ஏற்றார்போலவும், வசதியாக இருக்கும் வகையில், பொதுமக்களுக்கு நண்பராக தெரியும் வகையிலும், மதிப்பை உயர்த்தும் வகையிலும் சீருடைகளை மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய ஆடையின் முழுக் கை சட்டை, நவீன தொப்பி, கார்கோ பேன்ட் என பல அம்சங்கள் உள்ளன.

இதற்காக போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ஆமதாபாத்தில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய சீருடைகளை வடிவமைத்து வருகிறது.

இதற்காக தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம், உலகில் உள்ள முக்கிய நாடுகளில் எப்படி எல்லாம் போலீசார், ராணுவத்தினர் சீருடைகளை அணிந்து வருகிறார்கள் என்பது குறித்து ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.  இந்த திட்டத்துக்கு ‘ஸ்மார்ட் போலீஸ்மென்; டெவலப்பிங் டிசைன் அன்ட் டிரையல் ஆப்ஹை பெர்பார்மன்ஸ் யூனிபார்ம் ஆர்டிகல்ஸ் அன்ட் அக்சரரிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2017ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள்முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஆதலால், இந்த ஆய்வு முடிந்தவுடன், ராணுவம், மற்றும் போலீசாருக்கு கவர்ச்சிகரமான பேண்ட், சட்டை, தரமான, பன்முகபயன் கொண்ட பெல்ட், தரமானபூட்ஸ், தொப்பி ஆகியவை நாட்டில் உள்ள அனைத்து போலீசாருக்கும், மத்திய படைகளுக்கும் வழங்கப்படும். இந்த திட்டம் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.புதிய ஆடைகள் வடிவமைப்பு இறுதியாகி, விரைவில் வழங்கப்படும் என போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையின் தலைவர் எம்.டி. போர் வாங்கர்தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முடிந்து நடைமுறைக்கு வந்தவுடன், அதை மாநில அரசுகள் விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளுக்கும் இந்த புதிய வடிவமைப்பு சீருடைகள் அமல்படுத்தப்படும்.

இந்த புதிய சீருடை கால்சட்டை, சட்டையில், ஏராளமான பாக்கெட்டுகள், பன்முக பலன்கொண்ட பெல்ட், வயர்லெஸ் கருவி வைக்க பவுச்சுகள், ஆயுதம் வைக்கவும், துப்பாக்கி குண்டுகள் வைக்கவும் சிறப்பு பவுச்சுகள் என வடிவமைக்கப்படுகிறது. மேலும், தரமான தோலில் ஆன பூட்ஸ்கள், பெல்ட்கள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios