ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்தித்தபோது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது,ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழக அரசே அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தலாம்.முன்னதாக திமுக ஆட்சியில் இருந்த போது போன்ற அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பதால் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைக்கு பிறகட்சிகள் ஆதரவு தெரிவிப்பாக அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இன்று தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வரும் குறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர்கள் உடன் முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தனி சட்டம் இயற்றினால் நடத்த முடியுமா? இதனால் நீதிமன்ற அவமதிப்புகளை எப்படி சமாளிப்பது? மக்களுக்காக உருவாக்கப்பட்டது சட்டங்கள் மேலும் பிறநாடுகள் அவசர சட்டம் இயற்றப்பட்ட வீதம், மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான சாத்திய கூறு குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினர்.
மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி பச்சை சிக்னல் காட்டி விட்டதால் தமிழக இளைஞர்களுக்கு நல்ல செய்தி உடன் வருவேன் கூறினார்.ஆனால் டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வருக்கு 1 சதவீதம் கூட நம்பிக்கை தரக்கூடிய தகவல்களை மோடி தெரிவிக்கவில்லை,
ஆகையால் வழக்கறிஞர்கள் ஆலோசனை பிறகு தமிழக எம்பிகள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியை சந்திக்க தற்போது குடியரசுத்தலைவர் மாளிகை வந்துள்ளதாக அவர் அனுமதி பெற்று தமிழகத்தில் அவரச சட்டம் இயற்றப்படலாம் என தெரிகிறது
