வாயில் பட்டாசு வைத்து வெடித்ததில் 3 வயது சிறுமி படுகாயம்... இளைஞர் வெறிச்செயல்!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 8, Nov 2018, 12:55 PM IST
Meerut Diwali cracker in 3-yr-old mouth
Highlights

3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து தீயிட்டார், அப்போது பட்டாசு வெடித்து சிறுமி படுகாயம் அடைந்தாள். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து தீயிட்டார், அப்போது பட்டாசு வெடித்து சிறுமி படுகாயம் அடைந்தாள். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே சசிகுமார் என்பவரது 3 வயது மகள் விளையாடி கொண்டிருந்தாள். 

அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர், சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து தீயிட்டார். இதில், பட்டாசு வெடித்ததும், சிறுமி பலத்த காயமடைந்து அலறி துடித்தாள். அதை கேட்டதும், அப்பகுதி மக்ககள் ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

உடனடியாக குழந்தையை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் வாய்ப் பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டது. தொண்டையிலும் பலத்த தீக் காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஹர்பாலை வலைவீசி தேடி வருகின்றனர். குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

loader