இன்று அதிகாலையில் டெல்லி கரோல் பாக் பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 39 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் முக்கிய சந்தைப் பகுதியான கரோல்பாக் ஃகப்பார் மார்க்கெட்டில் இன்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகருகே கடைகள் அமைந்திருந்ததால் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாக பரவியது. அப்பகுதியிலிருந்த மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து 39 தீயைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்புகள் இல்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Scroll to load tweet…
