விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அணிய மறுக்கும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அணிய மறுக்கும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5233 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 4, கோடி 1 லட்சத்து 90 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாசிட்டிவ் ரேட் 1.62 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 0.91 ஆக இருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,857 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர், அதிகாரபூர்வமாக இதுவரை கொரோனாவிற்கு 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 பேர் பலியாகி உள்ளனர். தினசரி கேஸ்கள் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் ஆயிரத்து 242 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

கேரளாவில் 2 ஆயிரத்து 271 கேஸ்கள் பதிவாகி உள்ளது. பெருநகரங்களில் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளன. கொரோனா பரவல் உயர்ந்த காரணத்தால் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் விமான பயணத்தின் முழு நேரமும் முகக்கவசத்துடன் இருக்க வேண்டும் எனவும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத பயணிகள் எதிர்காலத்தில் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, முகக்கவசம் அணியாதவர்களை விமானத்தில் ஏற்றாதீர்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி விதிமீறலில் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
