உத்தரபிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழாவின் போது, சடங்கு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்தனர். அப்போது, பாரம் தாங்காமல் பலகை உடைந்ததில் பெண்கள், சிறுமிகள் உள்பட பலர் கிணற்றுக்குள் விழுந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவிற்கு வந்து இருந்த 13 பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழாவின் போது, சடங்கு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்தனர். அப்போது, பாரம் தாங்காமல் பலகை உடைந்ததில் பெண்கள், சிறுமிகள் உள்பட பலர் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்13 பெண்கள் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஷிநகர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உள்ளூர் நிர்வாகத்தால் சாத்தியமான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
