சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நெற்று முன்தினம் அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி ஆயுதங்களுடன் இருந்த மாவோயிஸ்ட் கமாண்டர் கட்மாவை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று சுக்மா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்று கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.