கோவா மாநில முதல் மந்திரியான மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக கணைய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்த ஒரு விஷயம். இவர் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கோவா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ்  தலைவர்  ராகுல் காந்தி இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து பேசிய ராகுல், 

"நேற்று முன்தினம் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தேன். அப்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை என்றும், பிரதமர் மோடி தான் அதை ஏற்படுத்தினார்" என  ஒரு மேடை நிகழ்வில் தெரிவித்து இருந்தார் ராகுல். 

இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மனோகர் பாரிக்கர். அந்த கடிதத்தில் ஐந்து நிமிடம் மரியாதை நிமித்தமாக சந்தித்த ஒரு சந்திப்பை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது என பதிலடி கொடுத்துள்ளார் மனோகர் பாரிக்கர் அந்த ஐந்து நிமிட சந்திப்பில் ரஃபேல் விவகாரம் பற்றி என்னிடம் ஏதாவது பேசினீர்களா? நாம் அதை பற்றி விவாதித்தோமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடந்த கோவா சட்டசபையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மனோகர் பரிக்கர் பாரிக்கர் பட்ஜெட் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்தும் ரபேல் ஒப்பந்தம் குறித்தும்  தான் ராகுல் காந்தியிடம் பேச வில்லை என  திட்டவட்டமாக மறுத்துள்ளார் மனோகர் பாரிக்கர்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.