ஆறு நாட்களாக வேலைக்கு வராத இளைஞரை, பெட்ரோல் பங்க்-ன் உரிமையாளரும் அவரது நண்பரும் தூணில் கட்டி வைத்து சவுக்கால் கடுமையாக தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்கபாத்-ல் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்க்-ல் பணிபுரியும் இளைஞர் ஒருவர் விபத்து காரணமாக கடந்த 6 நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். சற்று உடல் நலம் தேறிய உடன் அந்த இளைஞர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்றுள்ளார்.

6 நாட்களாக வேலைக்கு வாராத காரணத்தால், கோபமடைந்த பெட்ரோல் பங்க்-ன் உரிமையாளரும் அவரது நண்பரும், அந்த இளைஞரை தூணில் கட்டி வைத்து சவுக்கால் கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. இதனை அடிப்படையாக வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, அந்த பங்க்-ல் வேலை செய்து வந்த வாலிபர், ஆறு நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லை. அதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அவரை தொடர்பு கொண்டு பணிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இதையடுத்து, பங்குக்கு சென்ற வாலிபரை உரிமையாளரும் அவரின் நண்பரும் சேர்ந்து அங்கிருந்த தூணில் கட்டி வைத்து சவுக்கால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

அப்போது, விபத்தில் சிக்கியதால் தான் வேலைக்கு வர முடியவிலை என்று வாலிபர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனாலும், அதை பொருட்படுத்தாத அவர்கள் அந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.