கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் ஒருவர் கன்னத்தில் முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.  

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பாலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்தது. இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி, தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். 

இதனிடையே, ராகுல்காந்தி காரில் சென்றபோது அவரை காண மக்கள் கூட்டம் வழியில் நின்று வரவேற்பு அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது காரில் முன்பகுதியில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு தொண்டர்கள் வரிசையாக வந்து அவரிடம் கைகுலுக்கி சென்றனர். அதில், ஒரு தொண்டர் ஒருவர் திடீரென ராகுல் காந்தி கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அந்த தொண்டரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ராகுலுக்கு முத்தம் வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.