உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி 5 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததிருந்தனர். மேலும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ஜெய்ப்பூரில் கொரோனவால் மரணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.