mallya got bail sasikala did not get parole

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, கணவரைக் காண பரோல் கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், எத்தனை முறை கைதானாலும் அடுத்த அரைமணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகிறார். அதுவும் லண்டனில்...

இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், லண்டனிற்கு தப்பி ஓடினார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வங்கிகளில் கடன்பெற்ற தொகையை வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் பெயரில் மல்லையா முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த ஆதாரங்களை லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விரைவில் மல்லையா கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் எனவும் சிபிஐ நம்பிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், திடீரென விஜய் மல்லையா லண்டனில் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் மல்லையா. மல்லையாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளதாகவும் ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்து லண்டன் நீதிமன்றம் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கியது.

ஏற்கனவே ஒரு முறை இதேபொல் கைது செய்யப்பட்டு மல்லையா ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 9000 கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு லண்டனுக்கு தப்பியோடிய மல்லையா, இரண்டுமுறை சர்வசாதாரணமாக ஜாமீன் பெற்று சந்தோஷமாக வலம்வருகிறார்.

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு பரோல் கூட கிடைக்கவில்லை. கவலைக்கிடமாக உள்ள தனது கணவரைக் காண 15 நாட்கள் பரோலில் வெளியே செல்ல சசிகலா மனு அளித்திருந்தார். ஆனால் பரோல் மனுவில் குறைபாடுகள் இருப்பதால் மனுவை நிராகரித்த சிறை நிர்வாகம், கூடுதல் ஆவணங்கள், பிரமாணப் பத்திரங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துவிட்டது.

சசிகலா பரோலுக்கே அலைக்கழிக்கப்படும் நிலையில், மல்லையா மட்டும் எப்படித்தான் இத்தனை கோடியை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் ஈசியா ஜாமீன் வாங்குறாரோ? தெரியலயே... லண்டன் கோர்ட்டையே கரெக்ட் பண்ணீட்டாரோ? 

ஆனால், சிறைத்துறை அதிகாரிகளை கரெக்ட் பண்ணி சசிகலா தான் மாட்டிக்கிட்டாரு பாவம்.. அப்போ மாட்டலைனா.. இப்போ ஈசியா பரோல் வாங்கிருக்கலாம்..