பல்லாயிரம்கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் சிக்கி தலைமறைவாக உள்ள விஜய்மல்லையாவுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் உதவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய்மல்லையா, வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும், விசாரணைக்கு ஆஜராகாமல் தற்போது மல்லையா லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் தனக்கு உதவும்படி, விஜய் மல்லையா கூறியதாவும், இதுதொடர்பாக, 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை இ-மெயில் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பதில் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், பொருளாதார சிக்கலில் இருந்து விஜய்மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் தப்பிக்க ப.சிதம்பரம் தலைமையிலான அப்போதைய நிதியமைச்சகமும் விதிகளை தளர்த்தியதாகவும் பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
