Kharge: காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பதவி ஏற்றார் மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்றார்.

Mallikarjun Kharge is sworn in as Congress President.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்றார்.

தலைவராகப் பொறுப்பேற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி வழங்கினார்.

காங்கிரஸ் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகச் சொல்லுங்க! ராகுல் காந்திக்கு நெருக்கடியா? விவரம் என்ன?

டந்த 24 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைவராகவது இதுதான் முதல்முறையாகும். 80வயதான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்திக்கு அடுத்தார்போல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

Mallikarjun Kharge is sworn in as Congress President.

காங்கிரஸ் கட்சிக்குபுதிய தலைவர் தேர்ந்தெடுக்க கடந்த 17ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் நாடுமுழுதும் 9,500 நிர்வாகிகள் வாக்களித்தனர். இதில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜூன கார்கே தலைவராகிறாகப் பொறுப்பேற்றுள்ளார். 

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்கும் முன், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, முன்னாள் துணை பிரதமர் ஜெக்ஜீவன் ராம் ஆகியோர் நினைவிடத்துக்குச் சென்று கார்கே மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி கூறுகையில் “ காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வெளிப்படையாக தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளதை மற்றகட்சிகள் பாடமாக எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Mallikarjun Kharge is sworn in as Congress President.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறுகையில் “ மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ்கட்சி  உற்சாகத்துடனும், வலிமையுடனும் திகழும் என நம்புகிறேன். காங்கிரஸ் தலைவராக வந்துள்ளவர் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர் என்பது எனக்கு நிறைவாக இருக்கிறது, சாதாரண தொண்டராக இருந்து கட்சியில் உயர்ந்த பதவிக்கு தனது கடினஉழைப்பால் கார்கே உயர்ந்துள்ளார். 

‘பாத்ரூமில் உங்கள அடைக்கலைணு சந்தோஷப்படுங்க’! சசி தரூரை கிண்டலடித்து கொம்புசீவும் பாஜக

காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது என்னால் முடிந்த சிறந்த பணிகளைச் செய்தேன், இப்போது பதவியிலிருந்து விலகும்போது நிறைவுடன் விலகுகிறேன், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுபடுகிறேன். காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களைச் சந்தித்த்து வருகிறது, ஆனால், முழு வலிமையுடனும், ஒற்றுமையுடனும் நாம் முன்னோக்கி நகர வேண்டும்” எனத் தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios