Asianet News TamilAsianet News Tamil

சும்மா..கில்லி கில்லி மாதிரி நிற்கும் அபிநந்தன்..! எப்படி கேட்டும் சீக்ரெட்டை பகிராத அபி...வீர தமிழன்டா..!

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

major abi doesnot conveyed anything to pak officers
Author
Delhi, First Published Feb 27, 2019, 7:52 PM IST

சும்மா..கில்லி கில்லி மாதிரி நிற்கும் அபிநந்தன்..! 

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் இடையே வான் வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்று இந்திய எல்லைக்குள் நுழைந்த எப்-16 ரக விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. மேலும் சில விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பதிலடி கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றது.  

இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பபட்டார். இந்நிலையில், அபிநந்தன் உடன் பாக் ராணுவத்தினர் நடத்திய விசாரணையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளிவந்துள்ளது...
 
பாக் ராணுவ வீரரின் அடுத்தடுத்த கேள்விக்கு பதில் கூறி உள்ள அபிநந்தன் "தான் இந்தியாவின் டவுன் சவுத்" சேர்ந்தவர் என மன வலிமையுடன் வீரமாக சொல்கிறார்.

பாக் ராணுவ வீரர், உங்கள் பெயர் என்ன என்ற கேள்விக்கு அபிநந்தன் என்றும், எந்த பகுதி சேர்ந்தவர் என்ற கேள்விக்கு... இந்தியாவின் டவுன் சவுத் என்றும், உங்களை கடுமையாக தாக்கப்பட்டதா.? என்ற கேள்விக்கு...ஆமாம். ஆனால் அதே வேளையில் பாக் ராணுவ வீரர்களை பாராட்டுகிறேன்...கேப்டன் முதல் ராணுவ வீரர்கள் அனைவருமே மிகவும்  திறம்பட, நேர்மையாக நடந்துகொண்டனர் என தெரிவித்து உள்ளார்....

major abi doesnot conveyed anything to pak officers

நான் இந்தியா திரும்பி சென்றாலும் இங்கு சொன்ன அதே சொல்லை சொல்வேன்...எங்கள் வீரர்களும் இவ்வாறு தான் நடந்துக்கொள்ள வேண்டும் என ஒரு மேஜராக நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

major abi doesnot conveyed anything to pak officers

விசாரணையின் போது, அபிநந்தனுக்கு சூடாக டீ வழங்கப் பட்டது. இடையே கேட்ட இன்னொரு கேள்வி .. டீ எப்படி இருக்கு..? நன்றாக உள்ளது என்கிறார் அபிநந்தன். பின்னர் கடைசியாக.. உங்கள் நோக்கம் என்ன? எந்த ஏர்கிராப்ட்ஸில் புறப்பட்டீர்கள்..என்ற கேள்விக்கு. சாரி. நான் மேஜர்.. இந்த விவரத்தை எல்லாம் சொல்ல முடியாது என நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பதில் கூறி உள்ளார் அபிநந்தன்....இத்துடன் இந்த வீடியோ பதிவு முடிகிறது ..

அபிநந்தன் விரைவில் நாடு திரும்ப இந்தியா வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இருந்தாலும் இந்திய வீரரின் சாதுர்த்தியத்தை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios