134 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் மகிளா பிரிவு பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினகரனின் அமமுக கட்சியில் இருந்துவந்த அவர், அக்கட்சியிலிருந்து விலகி ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தி வழங்கினார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிந்துள்ள காங்கிரஸ் கட்சி, மகிளா காங்கிரஸ் நிர்வாகியாக திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளதைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளது.

 

பத்திரிகையாளர், சமூக சேவகர், டாக் ஷோ தொகுப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் திருநங்கை அப்சராவுக்கு உண்டு.  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். ஜெயா டிவியில் ஷோ ஒன்றையும் நடத்தி வந்தார்.

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரன் அணியில் இருந்தவந்த அப்சரா, அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அப்சராவுக்குக் கொடுத்த இந்தப் பதவியை திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள். “அப்சராவுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் இது பெரும்  கெளரவம்” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.