மும்பையில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்தும் - லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெலகாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் சொகுசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் மாசேவ் கிராம பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர். 

இந்த கோர விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.