மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  200 பேர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் என்ற இடத்தில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின் 3 தளங்கள் இன்று இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஆதிதி எஸ் தட்கரே மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.