மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேரணியின் போது திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேரணியின் போது திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வரும் 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் ஜபால்பூர் மாவட்டத்தில் 8 கிமீ தொலைவு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலை நெடுகிலும் கட்சி கொடிகள் மற்றும் வண்ண பலூன்களுடனும் தொண்டர்கள் வரவேற்றனர்.

அப்போது சில தொண்டர்கள் ராகுல்காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வாகனத்தை நோக்கி வந்தனர். ஆரத்தி எடுக்கும் போது அருகில் இருந்த பலூன் மீது படவே பட பட வென வெடித்து சிதறியது. அப்போது ராகுல்காந்தி சற்று தள்ளியிருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.