Rahul: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஆசிரியர் சஸ்பெண்ட்: மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்றதால், ஆசிரியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்றதால், ஆசிரியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இதுவரை தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களைக் கடந்து தற்போது மத்தியப்பிரதேதச்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். அடுத்த சில நாட்களில் ராஜஸ்தானுக்குள் யாத்திரை செல்லஉள்ளது.
இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு
இந்நிலையில் பார்வானி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் சென்று வருகிறது. இங்குள்ள கான்சயா கிராமத்தில் உள்ள பழங்குடியின தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜேஷ் கன்னோஜ் நடைபயணத்தில் பங்கேற்றதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கனாசயா நகரில் உள்ள பழங்குடியின நலத்துறையின் கீழ்வரும் தொடக்கப்பள்ளியில் ராஜேஷ் கன்னோஜ் ஆசிரியராக இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றிய திரும்பிய அவரை கடந்த மாதம் 25ம்தேதி சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தன்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ராஜேஷ் கன்னோஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
பிரபல நிறுவன துணைத் தலைவரின் தீரம்! செல்போன் திருடனை துரத்திப்பிடித்து போலீஸில் ஒப்படைப்பு
பழங்குடி நலத்துறை துணை ஆணையர் என்எஸ் ரகுவன்ஷி கூறுகையில் “ பணிக்கால விதிமுறை மீறியதற்காகவும், அரசியல் பேரணியில் பங்கேற்றதற்காகவும் கன்னோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முக்கியமான பணி இருப்பதாகக் கூறி சென்ற கன்னோஜ், அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி அரசியல் நிகழ்ச்சியில் பணிநேரத்தின்போது பங்கேற்றதால் கன்னோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
டெல்லி மதுபார் ஊழல் வழக்கு: தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கே.கே.மிஸ்ரா கூறுகையில் “ ஆர்எஸ்எஸ் அமைப்பின் சஹாஸில் பங்கேற்ற அரசு ஊழியர்களை சிவராஜ் சிங் அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றதற்காக பழங்குடியைச்சேர்ந்த ராஜேஷ் கன்னோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். “எ னத் தெரிவித்தார்