புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களது குடும்பத்தினருக்கு எல்.ஐ.சி நிறுவனம் எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் காப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது.

 

ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோரச் சம்பவம் இந்திய மக்களின் இதயங்களை உலுக்கியது.

இந்நிலையில் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் மாண்டியா கிளை சார்பாக 3 லட்சத்து 82 ஆயிரத்து 199 ரூபாயை எந்தவித ஆவணங்களும் இன்றி இறப்புச் சான்றிதழைக் கூட கேட்காமல் மரணமடைந்த வீரர்களின் வாரிசுதாரர் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளது. மனிதநேய அடிப்படையில் இந்த தொகையை எல்.ஐ.சி நிறுவனம் வழங்கி உள்ளது.