சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலை மொத்தமாக புறக்கணிப்போம் - மிரட்டல் விடுக்கும் இந்தியாவின் முக்கிய தலைவர்
சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று காஷ்மீரில் முக்கிய மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவர்
பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று காஷ்மீரில் முக்கிய மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவர்
பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சி
தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீர் சிறப்பு சட்டம் 35 ஏ மற்றும் 370 விஷயத்தில் மத்திய அரசு தனது
நிலையை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக என் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன். சிறப்பு சட்டத்துக்கு பாதகம் வரும்போது பார்த்துக் கொண்டிருக்க
முடியாது என்றார்.
மேலும் பேசிய அவர், தற்போது உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளோம். இதுபோல் வரும் காலத்தில் சட்டமன்ற - நாடாளுமன்ற
தேர்தலையும் புறக்கணிப்போம் என்று பரூக் அப்துல்லா காட்டமாக தெரிவித்தார்.