ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத்தீவன ஊழலில் 5-வது வழக்கில் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத்தீவன ஊழலில் 5-வது வழக்கில் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.
5-வது மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளி என கடந்த 15-ம் தேதி லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்களை இன்று நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் 170 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 24 பேர் விடுவிக்கப்பட்டனர், 46 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தோரண்டா கரூவூலத்தலிருந்து ரூ.139 கோடி பணத்தை முறைகேடாக எடுத்தார் என்று மாட்டுத்தீவன ஊழல் 5-வது வழக்கில் லாலுபிரசாத் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
லாலுபிரசாத் யாதவ் மீது 5 மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டன. இதில் 4 வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டநிலையில் 5-வது வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 170 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். வழக்கின் விசாரணையின்போது 55 பேர் உயிரிழந்துவிட்டனர், 5 பேர் அரசுதரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர். 2 பேர் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர், 6 பேர் தலைமுறையாக உள்ளனர். கடந்த 15-ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் லாலு உள்ளிட்ட 46 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
பிஹார் மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது கடந்த 1996ம் ஆண்டு முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் இந்த ஊழல் நடந்தது. கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் ரூ.950 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 1996-ம் ஆண்டு கால்நடைபராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் நடத்தி ரெய்டில்தான் இந்தஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கு மீது பல்வேறு அழுத்தங்கள் வந்ததையடுத்து கடந்த 1996ம் ஆண்டு மார்ச் மாதம் கால்நடைதீவண ஊழல் வழக்கு சிபிஐக்கு பாட்னா உயர் நீதிமன்றம் மாற்றியது.

கடந்த 1997ம் ஆண்டு லாலு மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அப்போது முதல்வராக இருந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, தனது மனைவி ராப்ரி தேவியை லாலு முதல்வராக்கினார்.
பிஹார் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உதயமானபின், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு 2001ம் ஆண்டு மாற்றப்பட்டது. 2002ம் ஆண்டிலிருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மாட்டுத்தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்து.
மோசடி செய்து ரூ.37.70 கோடி பணத்தை அரசின் கரூவூலத்திலிருந்து எடுத்தது தொடர்பான முதல் வழக்கில் லாலுபிரசாத் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து.
இதனால் மக்களவை எம்.பி. யாக 5 ஆண்டுகளுக்கு போட்டியிடமுடியாமல் தகுதியிழப்பு லாலுபிரசாத் ஆளாகினார். ஆனால்,அதன்பின் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
ரூ.89.70 கோடி பணத்தை அரசின் கரூவூலத்திலிருந்து முறைகேடாக எடுத்த 2-வது வழக்கி்ல லாலுபிரசாத் 2017ம் ஆண்டு குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் 3.5 ஆண்டுகள் சிறை தண்டணை லாலுவுக்கு விதிக்கப்பட்டது, கடந்த ஆண்டு ஜூலையில்தான் இந்த வழக்கில் பாதி தண்டனையை முடித்து ஜாமீனில் லாலு வெளியே வந்தார்.
ரூ.33 கோடி பணத்தை எடுத்த 3-வது வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை லாலுவுக்கு விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது
ரூ.3.76 கோடியை அரசின் கருவூலத்திலிருந்து எடுத்த 4-வது வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம், லாலு குற்றவாளி என அறிவித்த சிபிஐ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது
