lady police constable massage sub inspector

தெலங்கானா மாநிலத்தில் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹசன் என்பவருக்கு பெண் கான்ஸ்டபிள் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக விசாரிக்குமாறு சரக டிஐஜி உத்தரவிட்டதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஹசனுக்கு முதுகுவலி ஏற்பட்டபோது பெண் கான்ஸ்டபிள் மருந்து தேய்த்துவிட்டதாக தெரியவந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதுவும் விதியை மீறிய செயல் என்பதால் உதவி ஆய்வாளர் ஹசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண் கான்ஸ்டபிள், போலீஸ் சீருடையிலேயே இருக்கிறார். 

வைரலாக பரவும் அந்த வீடியோ:
<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x6952z9" allowfullscreen></iframe>