Kolkata NGO Unique Campaign To Save The Animal
கால்நடைகளை காக்கும் பொருட்டு, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க, ‘பசுவுடன் செல்பி’ எடுக்கும் போட்டியை தொண்டு நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ‘ கோ சேவா பரிவார் ’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் செய்துள்ள அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.
இது குறித்து கோ சேவா பரிவார் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், “ பசு பாதுகாப்பு என்பதை மதம், அரசியலோடு தொடர்பு படுத்து பார்க்க கூடாது. பசு, கால்நடைகள் பாதுகாப்பு என்பது சமூகத்துக்காகவும், அறிவியல் பயன்பாட்டுக்காவும் முக்கியமானது. அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறவே இந்த போட்டியாகும்.
பசுவிடம் இருந்து பெறும் ஒவ்வொரு பொருளும் பயன்பாட்டுக்குரியது. அதன் கழிவுப்பொருளும் அறிவியல் மதிப்புடையது, அதன் பால், கோமியம், சாணம் ஆகியவற்றுக்கும் தனிதனி பயன்பாடு இருக்கிறது.
பசுவுடன் செல்பி போட்டியின் மூலம், காள்நடைகள் குறித்த பொருளாதார, மருத்துவ பயன்களையும், பசுக்களை கொல்லக்கூடாது என்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட முடியும்.
கடந்த 2015ம் ஆண்டு இதே போன்ற போட்டியை அறிமுகப்படுத்தினோம், 700 பேர் வித்தியாசமான செல்பிகளை எடுத்து அனுப்பி இருந்தனர்.
இந்த ஆண்டு செல்பிக்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31ந் தேதியாகும். வெற்றியாளர்கள் 2019ம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி அறிவிக்கப்பட்டு பரிசுள் அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
