know about availability design changes New Rs 10 Rs 50 Rs 200 notes
ரூபாய் நோட்டு சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க 10 ரூபாய்,50 ரூபாய், முதல் 200 ரூபாய் என இதுவரை வராத புதுசு புதுசா டிஸைன் செய்து வைத்துள்ளதாம் மத்திய ரிசர்வ் வங்கி.
கடந்த 2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அந்த நோட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் வங்கியில் கொடுத்து புதிய 500 ரூபாய் நோட்டும், 2000 நோட்டுக்ளையும் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என இருந்த பொது இருந்ததை ரூபாய் விட சில்லறை தட்டுப்பாடு அதிகரித்தது. ௨௦௦௦, ௫௦௦, அடுத்ததாக் ௧௦௦ ரூபாய் நோட்டாக இருந்தது.
.jpeg)
எனவே சில்லறை கிடைக்காமல் வணிகர்கள், பொதுமக்கள் என முழுமையாக பதித்தனர். அதேபோல ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 10,௧௦,100 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சில்லறை தட்டுப்பட்ட சமாளிக்க ரிசர்வ் வங்கி விரைவில் முற்றிலும் புதிய வடிவத்தில் 50 முதல் 200 வரையிலும் ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி முற்றிலும் புதிய வடிவத்தில் 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.
.jpg)
புதிய 200 ரூபாய் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டாலும், அவை முதலில் அனைத்து வங்கிகளின் கிளைகளில் மட்டுமே கிடைக்கப்பட்டு வந்தன. வங்கிகளின் ஏடிஎம்களில் அவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. காரணம் அவை முற்றிலும் அளவில் மாறுபட்டு இருந்ததால், அவற்றிற்கு ஏற்றவாறு ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய கால ஆவகாசம் தேவைப்பட்டதால் அவை பொதுமக்களுக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களும் 200 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்ட பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் ஏடிஎம் மூலமும் 200 ரூபாய் நோட்டுக்களை எடுத்துவந்தனர். ஆனால் அதே சமயத்தில் அனைத்து வங்கி கிளைகளிலும் 200 நோட்டுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
.jpg)
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுக்கள்
புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்தாலும் இருநூறு ரூபாய் நோட்டைப் போலவே பெரிதாக சென்றடையவில்லை. நிலைமையை சமாளிக்கமுடியாமல் மீண்டும் 10 முதல் 200 வரையிலும் ரூபாய் நோட்டுக்களை புதிய வடிவத்தில் அச்சிட்டு புழக்கத்திற்கு விடப்போவதாக அறிவித்தது.

அதேபோல, கடந்த ஆண்டு புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தற்போது புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய வடிவமைப்பையே புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் ஒத்திருந்தாலும், அடர் இளஞ்சிவப்பு பச்சை வண்ணத்தில் இருக்கின்றன. 10 ரூபாய் நோட்டு மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால், 1 ரூபாய் நோட்டை இந்திய அரசே நேரடியாக வெளியிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சான ஆண்டு 2017 வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது.
.jpg)
சாக்கெலட் பிரவுன் கலரில் வெளிவரவிருக் கும் இந்த புதிய 10 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். ரூபாய் நோட்டின் முன் புறத்தின் நடுவே மகாத்மா காந்தி உருவப்படமும், வலது பக்கத்தில் அசோகா தூண் சின்னமும் இடம்பெற்றிருக்கும். ரூபாய் நோட்டின் பின் புறத்தில், இந்தியாவின் பாரம் பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கோனார்க்கில் உள்ள சூரியக் கோயிலின் படம் அச்சிடப்பட்டிருக்கும். ரூ.10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டிருக்கும் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், வாசகமும் அதில் இடம்பெற்றிருக்கும். ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடமும் இடம் பெற்றிருக்கும். கீழ்புறத்தில் 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களில் உள்ளது போலவே காட்டு விலங்குகளான புலி, யானை மற்றும் காண்டாமிருகம் ஆகியவற்றின் படமும் அச்சிடப்பட்டிருக்கிறது.
63மிமீ ஜ் 123 மிமீ அளவில் இந்த நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய நோட்டுகள் புழக்கத் துக்கு வந்தாலும் ஏற்கெனவே உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
.jpg)
கடந்த ஆண்டு வெளியான புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் பார்த்து அறிவதற்கு சிரமமாக இருப்பதால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும் என்று டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய 50 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக்கொண்டு மீண்டும் புதிதாக டிசைன் செய்து 50 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.
மேலும், 10, 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாக கிடைத்த 2019ம் ஆண்டின் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தற்போது உள்ள 100 ரூபாய் நோட்டின் அதே அளவில் புதிய வடிவில் அச்சடிக்கும் பணி தொடங்கும் தெரிவிக்கிறது.
