புதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார்.

புதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்‍கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த மேம்பால பணிகள் நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார். அப்போது நீண்ட நாட்கள் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்‍கள் தெரிவித்தனர். எனவே பணிகளை விரைந்து முடிக்‍ககோரி அதிகாரிகளுக்‍கு கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.