ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றிக் கொண்டே வருகிறது.
 
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெரிய சிக்கலில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சிதம்பரத்திற்கு பிரச்சனை ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. 

இதனை அடுத்து ப.சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில்சிபல் அவரது சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நீதிபதி ரமணா முன்பு நடைபெற்றது. இதிலும் பின்னடைவாக சிதம்பரத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்திற்கு எதிரான அக்னி நெருப்பு வார்த்தைகளை காக்கி உள்ளது.

அதாவது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பண பரிவர்த்தனை விவகாரத்தில் ப.சிதம்பரம் தான் பிரதான சதிகாரர் என்றும் அதாவது kingpin என்றும் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற முறைகேட்டிற்கு சிறந்த உதாரணம் இந்த வழக்கு என்றும் நீதிபதி சுனில் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தை கைது செய்து விசாரித்து தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். குற்றத்தின் தீவிரத் தன்மை மற்றும் விசாரணையின்போது சிதம்பரம் மழுப்பலாக தகவல்களை தெரிவித்தார். என்பதன் அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்படுவதாக சுனில் தெரிவித்துள்ளார். 

மேலும், சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் அளித்து சமுதாயத்திற்கு தவறான தகவலை அழித்துவிடும் என்றும் நீதிபதிகள் பகிரங்கமாக தெரிவித்தனர். அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரத்தின் தரப்பு வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்து அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது பெரிய அளவில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதி தெரிவித்ததால் சிதம்பரத்திற்கு ஜெயில் வாழ்க்கை நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். 

அரசியல் மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் இது மட்டுமின்றி இந்த பொருளாதார முறைகேடு தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்கி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார். இதுமட்டுமன்றி இதுபோன்ற சட்டத்தை இயற்றும் இடத்தில் உள்ளவர்களே சட்டத்தை வளைத்து வரம்பு மீறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய ஆவணங்கள் காட்டுவது என்னமோ மிகச்சிறிய அளவிலான ஆதாரங்கள் மட்டுமே தனிநபர் சுதந்திரம் மேலானது தான் என்றாலும் சட்டம் எல்லாவற்றையும் விட சிறந்தது மேலானது என்றும் சுனில் தெரிவித்தார் நீதிபதி சுனில் கவுலின் இந்த கருத்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.