Asianet News TamilAsianet News Tamil

கேரளா தங்க கடத்தல் வழக்கு; என்னை கொன்று விடுங்கள்..- ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி !!

Kerala gold smuggling case : ‘முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவர் மீதும் நான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளேன். அவ்வாறு ரகசிய வாக்குமூலத்தின்போது நான் அவர்கள் மீது கூறிய புகார்களிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை.

Kill me so story gets over Kerala gold smuggling accused Swapna Suresh breaks down
Author
First Published Jun 12, 2022, 5:10 PM IST

தங்க கடத்தல் வழக்கு

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

Kill me so story gets over Kerala gold smuggling accused Swapna Suresh breaks down

இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

முதல்வர் பினராயி விஜயன்

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறினார்.  மேலும், கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்வப்னா சுரேஷ். அவர், ‘முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவர் மீதும் நான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளேன். அவ்வாறு ரகசிய வாக்குமூலத்தின்போது நான் அவர்கள் மீது கூறிய புகார்களிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை குறி வைத்து காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. 

Kill me so story gets over Kerala gold smuggling accused Swapna Suresh breaks down

ஸ்வப்னா சுரேஷ் - கண்ணீர் பேட்டி

சரித்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என பத்திரிகையாளர் ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அதே போல் நடந்தது. என்னுடைய வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யும் என்றும் கிரண் கூறியிருந்தார். அதுவும் நடந்தது. என்னை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னை கொன்றுவிடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும்’ எனவும் கூறி, பத்திரிகையாளர்கள் முன்பாக அவர் கதறி அழுதார் ஸ்வப்னா சுரேஷ்.இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : ”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios